சத்தமே இல்லாமல் வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்பு வீடியோ.! இதன் என்னோட அப்துல் காலிக்!!

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிம்பு. தனக்கென ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். சமீபகாலமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் சிம்பு அவர்கள் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்திற்காக அவர் வித்தியாசமான நடிக்கிறார் என சமீபத்தில் வெளியாகியது இந்தனை அறிந்த அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்பொழுது சில பாடல்களை இசை அமைத்து உள்ளார் எனவும் அதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் பாடல்களை கேட்டு சிறப்பாக வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார் மேலும் அவர்  தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மற்றும் இவன் சங்கர் ராஜாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார். மற்றும் எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி கருணாகரன் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் ஆகிய முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவின் பிறந்தநாள் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது இந்தப் பிறந்தநாளில் சகோ சிம்புவிற்கு சேஞ்சு ஓவராக இருக்குமெனவும் கூறியுள்ளார்.சிம்புவிடம் இருக்கும் இருக்கும் திறமைகள் அனைத்தும் இப்படத்தில் அப்துல் காலீக்காக தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment