அவனுக்கு மட்டும் பணத்தை தூக்கி தரீங்க எனக்கு தூக்கி தர மாட்டீங்களா.? பிரபல நடிகரை காரணம் காட்டி காரியத்தை சாதிக்க பார்க்கும் சிம்பு.!

கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகளில் பல நடிகர்களின் படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதன் வகையில் நடிகர்களும் படம் ஹிட் ஆகிவிட்டால் உடனே சம்பளத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். மேலும் அந்த வகையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவரது ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றதால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார்.

இவர் நடிக்கும் திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்களும் தயங்காமல் கொடுக்கிறார்களாம். அதேபோல் தற்பொழுது சிம்புவும் சம்பளம் அதிகமாக கேட்பதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

அதாவது நடிகர் சிம்பு தனது உடல் எடை முழுவதும் குறைத்து மீண்டும் ரசிகர்களுக்கு பிடிக்குவது போல் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிம்பு தனது அடுத்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 35 கோடி வரை சம்பளம் கேட்டு வருவதாக தகவல் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் சம்பள விஷயத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்களா என்று கரராகவும் பேசி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

sivakarthikyan
sivakarthikyan

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சிம்பு அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் அந்தத் திரைப்படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்றால் அதில் அவரது நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment