காதல் குறித்தும் வருங்கால மனைவி குறித்தும் பேசிய சிம்பு -இனி இப்படி தானாம்.

தமிழ் சினிமாவில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தார் ஹீரோவாக ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழ் சினிமாவில் தனது திறமையை மேலும் வெளிகாட்டும் வகையில் இயக்குனராகவும் பாடகராகவும் நடன கலைஞராகவும் தன்னை மாற்றிக்கொண்டு சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக விஸ்வரூபம் எடுத்தார்.

சினிமா உலகில் இவரது வரவேற்பு ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்ததால் அஜித் விஜய் போல் சிம்பு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில காதல் விஷயங்களில் மாட்டி சிக்கி சின்னாபின்னமானார். மேலும் அப்பொழுது சிம்பு நடித்த திரைப்படங்கள் பெரிதும் தோல்வியையே சந்தித்தது இதனால் ஒரு கட்டத்தில் சிம்பு சினிமா உலகில் ஆள் அட்ரஸை தெரியாமல் போனார்.

முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வல்லவன் திரைப்படத்திலிருந்து காதலிக்க ஆரம்பித்து விட்டார் இருவரும் காதலில் உலா வந்தாலும் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர் நயன்தாராவை தொடர்ந்து நடிகர் சிம்பு ஹன்சிகாவை காதலித்து வந்தார். இவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டதன் காரணமாக பிரிந்ததாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில்  தகவல்கள் வெளியாகின.

சிம்பு தொடர்ந்து காதல் தோல்விகள் மற்றும் படங்கள் வெற்றி பெறாததால் நடிகர் சிம்பு மனவேதனையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் ஆள் பார்ப்பதற்கு ஹீரோ போல் தெரியாமல் உடல் எடையை ஏற்றி கொண்டு மாறினார். இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட சிம்பு தனது எண்ணங்களை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் உடல் எடையை தாறுமாறாக குறைத்து தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இவர் கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக தற்போது சிம்பு சந்தோஷத்தில் இருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு பேசியிருந்தார் அவர் கூறியது என் மேல் அன்பு இருந்தவர்கள் நிறைய பேர் நான் அன்பு வைத்த அவர்களும் நிறைய பேர் நினைவுகளை திருத்திக் கொண்டே போக கூடாது எல்லாம் மறந்து விட்டது என்று என்னால் பொய் சொல்ல முடியாது.

அதில் இருந்து நான் வெகுதூரம் நான் வந்துவிட்டேன் அதுதான் இமயமலைக்கு போய் வந்ததும் தொடச்சு விட்டா மாதிரி ஆகிவிட்டது. சின்ன வயதில் டவுசர் போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டி இருப்போம் ஆடியிருக்கும் அதெல்லாம் இப்ப நினைவுகள்தானே அப்படி தான் என் வாழ்கையும் போகணும் அதுதான் நியாயம் இனி வருகின்ற அவர்களுக்கு ஆறுதலாக உதவியாக துணை இருக்கணும் நினைச்ச மாதிரி சின்ன சின்ன சண்டை போடணும் நினைத்த மாதிரியே எந்த தொல்லையில்லாமல் சேர்ந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

Leave a Comment