தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது ஏற்கனவே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் இது திரைப்படத்திற்காக சிம்பு புதிய ஹேர் ஸ்டைலில் சுற்றிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார் அது ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது எங்கு திரும்பினாலும் எப்பொழுது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் திருமணம் நடக்கும் பொழுது அது தானாக நடக்கும் தனியாக இருந்தாலோ அல்லது குடும்பத்துடன் இருந்தாலோ அது ஒரு மேட்டர் கிடையாது நாம் ஒழுங்காக நிம்மதியாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம்.. சந்தோஷமான மனதுடன் இருந்தாலே போதும் நான்கு பேரை நிம்மதியாக பார்த்துக் கொள்ள முடிந்தாலே அதுவே போதும்.
என்னடா தத்துவம் பேசுறன் என்று நினைக்க வேண்டாம் வாழ்க்கையில் ரொம்ப அடி வாங்கிட்டேன் அதனாலதான் இப்படி பேசுகிறேன் என கூறியுள்ளார்.