நாளை வெளியாக இருந்த விஜயின் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தயாரிப்பு தரப்பு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் அதிர்ந்து.தான் போயிருக்கின்றனர்.
புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது விஜய்க்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவராக களம் இறங்கியுள்ளனர்.
பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது திரை உலகம் அமைதியாக தான் இருந்தது. இப்போது படம் வெளியாகாத நிலையில் கார்த்திக் சுப்பராஜ், அஜய் ஞானமுத்து, சிபிராஜ், சாந்தனு, நந்தா, சனம் செட்டி என பலர் தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் சிம்பு விஜய் அண்ணா இதைவிட பெரிய புயல்களை நீங்கள் கடந்து வந்து உள்ளீர்கள். தடைகள் ஒருபோதும் உங்களை தடுத்து நிறுத்தாது. ஜனநாயகன் வெளியாகும் நாள் தான் உண்மையான திருவிழா என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் அரசியல் பிரபலங்கள் கூட இந்த விஷயத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இது அரசியல் சதி என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசியல் பிரபலங்கள் விஜய்க்காக களம் இறங்கியுள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.