திடீரென சம்பளத்தை உயர்த்திய சிம்பு.! அதிர்ச்சியில் இயக்குனர்கள்…

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்து நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகர் சிம்பு. இவரை பலரும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வந்தார்கள் இந்த நிலையில் நடிகர் சிம்புவின் திரைப்படம் என்றாலே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வந்தது அது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் விஜய் அஜித்திற்கு  இணையாக இருந்தவர்தான் நடிகர் சிம்பு.

ஒரு கட்டத்திற்கு மேல் சரியான திரைப்படம் கொடுக்காமல் சினிமா வாழ்க்கையே சரிய ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரணம் அவர் உடல் எடை அதிகரித்ததால் தான் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டேங்கிறார் என்று கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தன்னுடைய படத்தின் மூலம் வெற்றி கண்டு தற்போது இழந்த மார்க்கெட்டை பிடித்துக் கொண்டு வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு, மாநாடு, ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்து விண்ணை தாண்டி வருவாயா 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த இயக்குனர்கள் நடிகர் சிம்புவிற்கு கதை கூறி வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது நடிகர் சிம்பு அவர்கள் பத்து தல திரைப்படம் வெளியான பிறகு அடுத்த படத்தில் 40 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் சிம்புவிற்கு கதை சொன்ன இயக்குனர்கள் அதிர்ச்சியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment