ஆட்டத்தை தொடங்கிய சிம்பு .! வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்.

இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு  இந்த திரைப்படத்தின்  FDFS குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள திரைப்படம். மேலும் இந்த திரைப்படம் இயக்குனர் கௌதமன் அவர்கள் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சிம்பு அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சித்தி இதாணி அவர்கள் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், நீரஜ் மாதம், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெந்து தணிந்தது காடு திரைபடம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சிம்பு அவர்கள் 19 வயது இளைஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தோட நடிகர் சிம்பு அவர்கள் 15 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிம்புவின் வெந்து தனிந்தது காடு திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழகத்தில் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்திலிருந்து சென்சார் அப்டேட்டுகள் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு படத்திற்கு  யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் 2 மணி நேரம் 53 நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளது கடந்த மாதம் தமிழில் ரிலீசாகும் படங்களுக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவதில்லை அதே போல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் 4 மணி காட்சி திரையிடுவதில்லை அதற்கு பதிலாக 5 மணி காட்சி திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment