ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பு.! இனிதான் இருக்கு வெறித்தனமான அப்டேட்.!

0
simbu
simbu

சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் நடிகர் தான் சிம்பு இவர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

இருப்பினும் இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு தற்பொழுது வரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது.

மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் சிம்பு அடுத்ததாக பல இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் சிம்பு ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு தனது அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ரசிகர்களுக்கு வெளியிடப் போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது அதன்படி பார்த்தால் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்பு இதைப் பற்றி தான் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

simbu
simbu

இருந்தாலும் இவர் புதிதாக நடிக்கப் போகும் திரைப்படத்தைக் கூட பற்றி அப்டேட் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில பிரபலங்கள் கூறி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சிம்பு கொடுக்க போகும் அப்டேட்டை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.