சைக்கிள் கேப்பில் சிந்து பாடும் சிம்பு..! சிம்புவின் அடுத்த திரைப்படத்தில் இப்படி ஒரு டுவிஸ்டா..?

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது 10 தலை  என்ற திரைப்படத்தில் மிக பிஸியாக இருந்து வந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சில மாதங்களாக நடிகர் சிம்பு அவர்கள் ஓய்வில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஓய்வு நேரத்தில் நடிகர் சிம்பு ஒரு மிகப்பெரிய திட்டத்தை திட்டி உள்ளதாக கூறப்படுகிறது அதாவது என்னவென்றால் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்து விட்டது.

இன் நிலையில் அவர் நடித்த பத்து தலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வேளையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியுள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இவை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

simbu-01
simbu-01

இது ஒரு பக்கம் இருக்க பத்து தலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த கேப்பில் சிம்பு தற்காப்பு கலை ஒன்றில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருவது மட்டுமில்லாமல் பயிற்சி பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் இந்த பயிற்சி தான் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்திற்காக தான் என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment