நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட காலத்தில் இருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
நடிகர் சிம்பு அண்மையில் கூட நடித்து வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் சிம்புவுக்கு கதையெல்லாம் கூறிய கமிட்டாகி விட்டு பின் அவரை கழட்டி விட்ட சம்பவம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
அந்த இயக்குனர் வேறு யாருமல்ல கே வி ஆனந்த். தமிழ் சினிமாவில் இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, போட்டோகிராபர் போன்ற பல்வேறு திறமையை கையில் வைத்துக்கொண்டு ஓடியவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக பல்வேறு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.
அந்தவகையில் ககோ படத்தையும் இயக்கினார் இந்த படத்தில் ஜீவா, கார்த்திகா மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர். உண்மையில் இந்த படத்தில் முதலில் நடிக்க கே வி ஆனந்த் தேடிய நடிகர் தான் சிம்பு. அவரிடம் கதையை சொல்லி ஓகே எல்லாம் செய்து விட்டாராம் ஆனால் சிம்புவோ இந்த படத்தில் தனக்கு பிடித்த நடிகையை போட வேண்டும் என சொல்லி உள்ளார்.
அதை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கூறி ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டது ஆனால் சிம்பு முடியாது என ஒத்த காலில் நிற்க இயக்குனர் வேறு வழியில்லாமல் கடைசியாக நடிகர் சிம்புவை இந்த படத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு நடிகர் ஜீவாவை அதன்பிறகு போட்டாராம்.