என்னுடைய வெறித்தனத்தையும் தரமான சம்பவத்தையும் செகண்ட் பார்ட்ல பார்ப்பீங்க.! சக்சஸ் மீட்டில் ட்விஸ்ட் வைத்த சிம்பு.

கௌத மேனன், சிம்பு, ஏ ஆர் ரகுமான், கூட்டணியில் மூன்றாவது முறையாக அமைந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக்கியது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூலிலும் சிம்பு திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்பு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

இதற்கு முன்பு சிம்பு நடித்த திரைப்படங்களில் உடல் எடை அதிகரித்து நடித்திருந்ததால் பலரும் விமர்சனம் செய்தார்கள் அதுமட்டுமில்லாமல் நடனம் கூட ஆட முடியாமல் சிம்பு அவஸ்தை பட்டார் அதற்கு காரணம் உடல் அதிகரித்தது தான். ஆனால் கடந்த இரண்டு திரைப்படங்களாக தன்னுடைய உடல் எடை முழுவதும் குறைத்து சிம்பு நடித்து வருகிறார் இதனால் ரசிகர்களும் விரும்பி பார்க்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் வெந்த தணிந்தது காடு திரைப்படத்தில்  சிம்பு உடல் எடை முழுவதும் குறைத்து சின்ன பையன் போல் நடித்துள்ளார்.

22 வயது பையனாக நடித்துள்ள சிம்பு படத்தில் ரசிகர்கள் பலரும் சிம்புவை பார்த்து இது சிம்பு தானா என கேட்கும் அளவிற்கு அவரின் உடல் தோற்றம் இருக்கிறது இந்த நிலையில் இதுவரை வெந்து தணிந்தது காடு 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிரஸ்மீட் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது.

கௌதமேனன் உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். பொதுவாக சிம்பு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார் ஆனால் கடந்த சில வருடங்களாக நல்ல பிள்ளைத்தனமாக படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய சிம்புவின் மாநாடு திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸ்சில் அதிக வசூல் செய்து வருகிறது.

சக்சஸ் மீட்டில் பட குழு அனைவரும் கலந்து கொண்டார்கள் அப்பொழுது சிம்புவும் பேசினார் அவர் பேசும் பொழுது முதலில் அனைவருக்கும் நன்றி மேலும் ரெகுலரான கமர்சியல் திரைப்படமாக இல்லாமல் உருவான வெந்து தணிந்தது காடு சக்சஸ் ஆகுமா? என்ற சந்தேகம் இருந்தது ஆனால் இப்பொழுது நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் நிறைய கஷ்டங்களை கடந்து தானே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன் இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் வொர்க் பண்ணி இருந்தாலும் இந்த திரைப்படத்தில் வச்சு செஞ்சிட்டார் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தேன் அதற்கான ரிசல்ட் கிடைத்தது நான் கஷ்டப்பட்டு நடித்ததை மேக்கிங் வீடியோவில் நீங்களே பார்க்கலாம். மேலும் மல்லிகை பூ பாடல் மிகவும் கிட் அடிக்கும் என்று நான் அப்பவே கூறினேன் அதுபோல் நடந்துள்ளது.

வெந்து தணிந்தது காடு முதல் பாகம் கேங்ஸ்டர் திரைப்படம் கிடையாது இது முத்து எப்படி கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பது தான் முதல் பாகம் ஆனால் இரண்டாவது பாகத்தில் தான் ரியல் கேன்சர் கதை இருக்கிறது அதனை கௌதம் மேனன் சீக்கிரம் சொல்லணும் என்று சிம்பு அந்த மேடையில் பேசினார் அவரது பேச்சை வைத்து பார்க்கும் பொழுது இரண்டாவது பாகத்தில் தரமான சம்பவம் இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version