கோல வெறியுடன் பார்க்கும் சிம்பு “பத்து தல” போஸ்டரை வெளியிட்ட வார இதழ்.! மனுஷன் எப்படி இருக்கார் பாருங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் சிம்பு இவர் தனது அப்பா டி ராஜேந்தர் படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தலை காட்டினார். அதன் பிறகு பருவ வயதை எட்டியபின் ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார் அதுவும் ஆரம்பத்தில் இவர் நடித்த காதல் அழிவதில்லை, தம், காளை, கோவில்..

குத்து, மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் என ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்து.. வந்த சிம்பு திடீரென தோல்வி படங்களையும் கொடுக்க ஆரம்பித்தார் அதுவும் அடுத்தடுத்த தோல்வி படங்களை கொடுத்ததால் இவரது மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றது ஒரு வழியாக சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் டப் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை தொடர்ந்து பத்து தல திரைப்படத்தில் சூப்பராக நடித்து முடித்துள்ளார். வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்து தல திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் மற்றும் கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளனர் படம் வெளிவர இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தாலும் இந்த படத்தை பற்றி தான் சமூக வலைதள பக்கங்களில் அதிக பேச்சிகள் இருக்கின்றன.

இந்த நிலையில் ஆனந்த் விகடனின் இந்த வார இதழில் மணல் மாபியா கிங் சிம்பு என குறிப்பிட்டு 10 தல திரைப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment