சில்லுன்னு ஒரு காதல் பட இயக்குனருடன் இணையும் சிம்பு..! அதுவும் இப்படி ஒரு கேரக்டர்லயா..?

simbu next movie update: பொதுவாக நடிகர் சிம்பு சமீபகாலமாக பல சர்ச்சையில் சிக்கியது மட்டுமல்லாமல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காததன் காரணமாக தொடர்ந்து பட வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் அவரை தமிழ்சனிமாவை விட்டு துரத்த ஆரம்பித்தார்கள்.

இதை தொடர்ந்து தொந்தியும் தொப்பையுமாக இருந்த நமது நடிகர் சிம்பு சமீபத்தில் சுமார் 25 கிலோ அளவிற்கு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு 18 வயது இளம் வாலிபர் போல காட்சி அளித்து வருகிறார்.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வெறும் 30 நாட்களில் ஈஸ்வரன் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் ஏற்கனவே பாதியில் கைவிடப்பட்ட மாநாடு என்ற திரைப்படத்திலும் மிக விறுவிறுப்பாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நாகராஜன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம்தான் முஃட்டி இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் சிம்பு வில்லனாகவும் நடித்து வந்தார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு சரியாக படப்பிடிப்பு தளத்திற்கு வராததன் காரணமாகவும் தயாரிப்பாளர்கள் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மீதி படத்தை சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இயக்க உள்ளாராம்.  மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் மிக பிரம்மாண்டமாக தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது உடலை எடையை குறைத்துவிட்டு மிக அழகாக காட்சியளிக்கிறார் ஆனால் இந்தத் திரைப்படத்தில் மிக பருமனாக இருந்திருப்பார். இந்நிலையில் சிம்பு எப்படி என்ற திரைப்படத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களுக்கு கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

simbu
simbu
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment