சிம்புவோட மற்றொரு முகம் இதுதான்.! பிக்பாஸ் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட சீக்ரெட்

0
news
news

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் மூன்றாவது சீசன் முடிவடைந்த நிலையில் தர்ஷன்னின் காதலி சனம் ஷெட்டி நடிகர் சிம்புவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

தக்ஷனின் காதலி மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை சந்தித்து அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிம்புவுடன் செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் நடிகர் சிம்புவை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் டைட்டிலாக நான் பலருடைய ரசிகையாக இருந்து உள்ளேன் ஆனால் சிம்புவுக்கு மிகவும் உண்மையான ரசிகையாக இருந்துள்ளேன் என கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் சில நாட்களில் தான் சிம்புவை பற்றி தெரியும். ஆனால் அந்த சில நாட்களிலேயே அவரை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

மேலும் சிம்புவை புகழ்ந்து தள்ளியுள்ளார் சிம்புவை போல் அன்பு செலுத்துவதற்கு பாசம் கட்டுவதற்கு வேறு யாரும் கிடையாது அதே போல் எல்லோரையும் தனக்கு சமமாக நினைத்து அனைவரையும் மதிக்க கூடியவர். எனக்கும் தர்ஷனுக்கும்  தேவையான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்து எங்களை ஊக்குவித்தவர் நடிகர் சிம்புதான், மேலும் சினிமாவிலும் வாழ்க்கையிலும் சிம்புவின் அறிவை கண்டு நான் வியக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் நான் உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி எனக்கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் சனம் ஷெட்டி.