நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்தது குறித்து ரகசியம் உடைத்த சிம்பு. !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் தக் லைப் திரைப்படத்திற்கு பிறகு அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் எஸ்டிஆர் 50 எஸ்டிஆர் 51 ஆகிய திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்தது குறித்து வெளியான புகைப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு நானும் நயன்தாராவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானது உண்மைதான்.

முதலில் நான் அந்த புகைப்படத்தை நாங்கள் இருவரும் நடித்த படத்தில் முத்தக் காட்சியாக இருக்கும் என்றுதான் நினைத்தேன் அதன் பிறகு பார்த்தால் அது பர்ஸலான ஒன்று துபாயில் நாங்கள் இருவரும் இருந்த பொழுது புது கேமரா லேப்டாப் வாங்கினோம் அப்பொழுது இருவரும் எடுத்த புகைப்படம் தான் அது அந்த புகைப்படம் எப்படி வெளியானது என்று எனக்கே தெரியவில்லை ரொம்ப கஷ்டமாக இருந்தது என கூறினார்.