சிம்பு படத்தில் குத்துப்பாட்டுக்கு பஞ்சமிருக்காது.! இரண்டாவது ஹீரோயினாக யார் இணைந்துள்ளார் தெரியுமா.?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சூழ்நிலை காரணமாக அந்த திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநாடு திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு சுசீந்திரன் திரைப்படத்தை முடித்துவிடலாம் என சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது, மாநாடு திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு இந்த திரைப்படத்தை குறுகிய காலத்திலேயே முடிக்க படக்குழு முடிவெடுத்துள்ளார்.

சிம்புவின் இந்த மாற்றங்கள் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தன் ஏனென்றால் சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வர மாட்டார் என்றும் படத்தை சீக்கிரம் முடித்து கொடுக்க மாட்டார் என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது, ஆனால் இது எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சிம்பு நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு முன்பு சிம்பு உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் வயதான கெட்டப்பில் இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் இவர் எந்த லுக்கில் இருக்கிறார் எப்படி இருக்கிறார் என யாரும் பார்க்க முடியாத அளவிற்கு முகத்தை மூடிய வாறு புதிய கெட்டப்பில் கோவிலுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சிம்பு சுசீந்திரன் இணையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயதசமி அன்று வெளியிட்டார்கள் படக்குழு. இந்த திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது, நிதி அகர்வால் இந்த திரைப்படத்தில்  இணைந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான் அவருடன் இணைந்து நந்திதா ஸ்வேதா நடிக்க இருக்கிறாராம்.

நந்திதா ஸ்வேதா கிராமத்து கதைக்கு பொருந்த கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Nandita-Swetha- tamil360newz
Nandita-Swetha- tamil360newz

Leave a Comment