சிம்பு என்றாலே வம்பு என்ற காலம் மாறி தற்பொழுது தானுண்டு தன் வேலையுண்டு என படங்களில் நடிப்பதையே முழுமூச்சாக செய்து வருகிறார், அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை சுரேஷ், காமாட்சி என்ற தயாரிப்பாளர்கள் தான் தயாரித்து வருகிறார்.
மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, கல்யாணி, பிரியதர்ஷன் என முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்பொழுது உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது இந்த கொரோனா வைரஸ், இது தற்பொழுது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அதனால், இந்தியாவில் உள்ள மக்களை எச்சரிக்கும் விதமாக பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் கைபேசி வழியாகவும் வீடியோ மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், இதனால் பல திரையரங்குகள், மால்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது, இந்தநிலையில் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, அதில் சிம்புவின் மாநாடு திரைப்படமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநாடு படப்பிடிப்பு நின்றுவிட்டது. இது குறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர்கள் கூறியதாவது,கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான்.
மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் “மாநாடு” என கூறியுள்ளார்.
கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்?
இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் #STR தான்.மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் "மாநாடு" pic.twitter.com/RFKhqva4QO
— sureshkamatchi (@sureshkamatchi) March 16, 2020