தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தவர் தான் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து பின்பு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டவர்.
சிம்பு நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ஓரளவிற்கு வசூலித்து சாதனை படைத்தது.
மேலும் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் மாநாடு திரைப்படத்தில் தனது உடல் எடையை முழுமையாக குறைத்து பார்ப்பதற்கு ஒரு கல்வி போகும் ஆண் போல் இருக்கிறார்.
இந்த திரைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும் இந்நிலையில் மாநாடு திரைப்படத்திற்காக அமைக்கப்பட்ட செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மாநாடு திரைப்படத்திற்காக இவ்வளவு பெரிய செட் அமைக்கிறார்களா என வாயடைத்து பார்த்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.
https://twitter.com/STRCults/status/1375278002548830214?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1375278002548830214%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Ffilms%2F06%2F191432