பூஜையுடன் தொடங்கியது சிம்புவின் மாநாடு வைரலாகும் பூஜை புகைப்படங்கள்

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், சிம்பு என்றாலே வம்பு என பலரும் கூறியுள்ளார்கள் ஏனென்றால் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார், சிம்பு மீது பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் குற்றச்சாட்டை வைத்தார்கள்.

ஆனால் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எந்தவித குற்றச்சாட்டையும் சிம்பு மீது வைக்காமல் அவரை எப்படி கையாள வேண்டுமோ அப்படியே கையாண்டு சிம்புவின் மாநாடு திரைப்படத்தை தொடங்கியிருக்கிறார். முதலில் மாநாடு திரைப்படம் அறிவித்தலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில் மாநாடு திரைப்படம் தொடங்காமல் இழுபறியில் இருந்தது, அதனால் மாநாடு திரைப்படம் நிறுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் கிளம்பியுள்ளன இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள், பின்னர் ஒருவழியாக மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் பரபரப்பாக மற்ற நடிகைகளை புக் செய்துள்ளார்கள் படக்குழு.

maanaadu
maanaadu

படத்தை எந்த வழியிலும் ட்ராப் செய்ய கூடாது என்பதற்காக அனைத்தையும் பக்காவாக செய்து வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி, மேலும் சிம்பு கட்டாயமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார், அதுமட்டுமில்லாமல் சிம்புவிற்கு மாநாடு திரைப்படத்தின் மீது அதிக ஆர்வம், ஆனால் தற்போது படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.

maanadu
maanadu

இரண்டு நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தி விட்டு பின்பு இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 50 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும் ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.

maanadu
maanadu

மேலும் சிம்புவின் மாநாடு திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார் பிரேம்ஜி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

Leave a Comment