40 வயசிலும் 20 வயசு பையன் போல் இருக்கும் சிம்பு.! ஆனா என்ன ஆறால் கேடு வாயால் கேடு தான்..

Simbu : சிம்பு என்றாலே வம்பு தான் அந்த அளவு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இவர் சிக்காத சர்ச்சைகளே கிடையாது அதனை விரல் விட்டு எண்ண முடியாது அப்படி சர்ச்சைகள் இணைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி சிம்பு உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைந்தது.

உடல் எடை அதிகமானதால் நடனம் ஆட முடியவில்லை என பலரும் கேலியும் கிண்டலும் செய்தார்கள் இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வெறித்தனமான ஒர்க் அவுட் ஆரம்பித்து தன்னுடைய உடல் எடையை முழுமையாக குறைத்தார். அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருந்தார் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் 100 கோடி வசூலை பெற்று கொடுத்தது சிம்புவுக்கு முதல் 100 கோடி திரைப்படம் என்ற பெயரும் கிடைத்தது மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு 10 தல யென இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் அந்த இரண்டு திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக எஸ் டி ஆர் 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இதன் ஆரம்பகட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது.

london simbu
london simbu

ஆனால் கொரோனா குமார் திரைப்படத்தின் பிரச்சினையால் கோர்ட்டில் கேஸ் நடைபெற்று வருகிறது அதனால் தான் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தாமதமாகிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் சிறிது பிரேக் கொடுத்துள்ள சிம்பு லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்கு லண்டன் வீதிகளில் உலா வரும்பொழுது சில புகைப்படங்களை எடுத்துள்ளார் அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

london simbu
london simbu

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 40 வயசுன்னு சொன்னா யார் நம்புவா இருபது வயசு பையன் போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

london simbu
london simbu