சிம்பு நீங்க மனுசனே இல்லை.! என கூறி அதிரடியாக புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை

0
simbu latest news
simbu latest news

சிம்புவை பாராட்டி சின்னத்திரை நடிகை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது, சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவருக்கு நடிப்பதை தாண்டி இசை அமைப்பது, படத்தை இயக்குவது, படத்தை தயாரிப்பது என பல திறமைகளை வைத்துள்ளார், இவருக்கு கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் வந்த ராஜாவை தான் வருவேன் ஆனால் இந்த திரைப்படத்தில் உடல் எடை பெருத்து மிகவும் குண்டாக இருந்தால் அதனால் இவர் ஒழுங்காக டான்ஸ் ஆட வில்லை, அதனால் இந்த திரைப்படம் ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளானது அதுமட்டுமில்லாமல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் உடல் பருமன் ஆகியதால் தான் சரியாக நடனமாட வில்லை என ரசிகர்கள் விமர்சித்தார்கள்.

அதனால் சிம்பு அதிரடியாக தனது உடல் எடையை குறைப்பதற்காக வெளிநாடு சென்று உடற் பயிற்சியை மேற்கொண்டார், அதனால் தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் இந்த நிலையில் ஹன்சிகாவின் மஹா திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார், மேலும் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு என்ற திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் சமீபத்தில் தான் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார், அதில் எனது  21 வருட வாழ்க்கையில் எந்த ஒரு பிரபல திடமும் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பவில்லை, ஆனால் டியர் சிம்பு நீங்கள் நடிகன் அல்ல.. என் கடவுள்.. நானும் பாடல்களைப் எழுதியுள்ளேன் அந்தப் பாடல்களை எனது நண்பரிடம் காட்டினால் லேடீ சிம்பு என்றுதான் அழைக்கிறார்கள் இதை நான் அவரிடமே காட்டினேன் உங்களை நேசிக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

simbu
simbu