முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு. அவர்கள் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் மாநாடு. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ளார். மாநாடுக்கு அடுத்ததாக மிக பெரிய கூட்டணியாக இது கருதப்படும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
பொண்ணியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து வருகிறார் இதையடுத்து அவர் சிம்புவை வைத்து புதிதாக ஒரு படத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிம்பு வெள்ளைக்கார பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ஆபாசமாக பேசியதால் அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்துக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன.
