தலைமுடி அதிகமாக முகத்தில் தாடியுடன் டிஆர் கெட்டப்பில் சிம்பு.! ஒருவேளை இது சுசீந்திரன் பட கெட்டப்பா இருக்குமோ.?

0

simbu getup : நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் வம்பு என கூறுவார்கள் அந்த அளவு சேட்டை செய்தவர், இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார், இந்த நிலையில் சிம்பு மாநாடு திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார்.

படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தான் தயாரித்து வருகிறார், சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா மனோஜ், ஆகியோர் நடித்துள்ளார்கள்,.

பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு திரைப்படம் என்றாலே பயங்கர என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதனால் ரசிகர்களிடம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வருகின்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது, இந்த இடைப்பட்ட காலத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து விடலாம் என எண்ணி தற்பொழுது படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிம்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் தன்னுடைய முகத்தை மாஸ்க் போட்டு மூடிக்கொண்டு தரிசனம் செய்துள்ளார் சுசீந்திரன் திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு தன்னுடைய கெட்டப் லீக் ஆகி விடக்கூடாது என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்.