சிம்பு பட இயக்குனர் தான் விஜயின் பூவே உனக்காக சங்கீதாவின் கணவரா.?

தமிழ் திரை உலகில் விஜயுடன் இணைந்து நடித்த பல நடிகைகளும் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் விஜய் ஒரு பிரபலமான நடிகர் என்பது நமக்கு தெரிந்தது தான் அந்த வகையில் பார்த்தால் விஜயுடன் இணைந்து நடித்த பல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் சங்கீதா.

இவர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரத்தை விட சங்கீதாவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த அளவிற்கு இவர் நன்றாக நடித்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் விஜய்யின் திரைப்பயணத்தில் பூவே உனக்காக திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அவருக்கு அமைந்தது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் வசூலில் கொஞ்சம் சொதப்பி விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் சங்கீதா பல திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது திடீரென ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் யார் அந்த ஒளிப்பதிவாளர் என்று கேட்டால் வேறு யாருமில்லை சரவணன் தான்.

இவர் ஒளிப்பதிவாளராக இருந்து பின்பு சிம்பு நடித்த சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்துவிட்டது இதனைத்தொடர்ந்து சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த சங்கீதா மற்றும் சரவணன் ஆகிய இருவரும் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார்கள்.

sangeetha
sangeetha

ஆம் சங்கீதா பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பொழுது மிகவும் இளமையாக இருந்தார் ஆனால் பார்ப்பதற்கு இவரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சங்கீதா மீண்டும் எப்பொழுது தமிழ் திரையுலகில் நடிக்க வருவார் எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது என கூறி ஒரு சில ரசிகர்கள் இவர்கள் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment