தமிழகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.
மேலும் வலிமை திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது நிலையில் அஜித் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.
மேலும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் கடந்த 2006ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் வரலாறு இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் அதிக நாள் ஓடியது.
இந்நிலையில் தல அஜித் வரலாறு படத்தின் படப்பிடிப்பின்போது அங்கு தல அஜித்தை பார்க்க சிம்பு மற்றும் விவேக் கலந்து கொண்டுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
https://twitter.com/Itz_Kettavan97/status/1343467400054722563?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343467400054722563%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F188696