சிம்புவை திருமணம் செய்து கொள்ள கூறி பிரபல நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்!! யார் அந்த நடிகை தெரியுமா?

0
Simbu-tamil360newz
Simbu-tamil360newz

Simbu fans ask Celebrity Actress to marry simbu: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் இவரது திருமணம் தான். சிம்புவின் திருமணத்தை அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிம்புவும் வீட்டில் இருந்து கொண்டே உடற்பயிற்சி செய்வது, வீட்டில் இருக்கும் தனது பெற்றோருக்கு விதவிதமாக சமைப்பது போன்ற வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளும் பெண் கொடுத்து வைத்தவள் என அவரைப் பாராட்டி வந்தனர். மேலும் அந்த வகையில் நடிகையும் மட்டும் பிக்பாஸ் பிரபலமுமான பிந்து மாதவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவின் மனைவியை சந்திக்க ஆவலுடன் காத்து கொண்டிருப்பதாக கூறி பதிவிட்டிருந்தார்.

பிந்து மாதவியின் இந்த பதிவை பார்த்து சிம்பு ரசிகர்கள் அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறிவருகின்றனர். இதோ அந்த பதிவு.