சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

simbu viral
simbu viral

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் வம்பு என்று கூறுமளவிற்கு சேட்டைகள் செய்து வந்தவர், ஆனால் சமீபகாலமாக சிம்பு தானுண்டு தன் வேலையுண்டு என படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சிம்பு நீண்டகாலமாக ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுப்பதற்காக போராடி வருகிறார், அந்தவகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொண்டிருந்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தை நடித்து முடித்து விடலாம் என தற்பொழுது பரபரப்பாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆனது.

இந்தநிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தை முடித்தவுடன் மீண்டும் மாநாடு திரைப்படத்தை தொடங்க இருக்கிறார் சிம்பு.

மேலும் சிம்பு நடித்துவரும் ஈசுவரன் திரைப்படத்தின் டீசர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார், டீசர் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

eswaran
eswaran