சிம்புவை புரட்டி எடுக்க வருகிறார் ஆர்யா.! இவர்களை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா.?

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஒரு காலகட்டத்தில் இளம்பெண்களின் கனவு மன்னனாக இருந்தவர், ஆனால் சமீப காலமாக இவரின் திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை, ஆனால் இவரது ரசிகர்கள் சிம்புவை எப்பொழுதும் கைவிடாமல் இருப்பது சிம்புவிற்கு மிகப்பெரிய பிளஸ்.

சிம்புவின் ரசிகர்கள் கைவிடாமல் இருப்பதை பார்த்த பல இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்க வரிசை கட்டி நிற்கிறார்கள், இன்று தளபதி விஜய்யை வைத்து இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஒருகாலத்தில் சிம்புவிடம் கதை சொன்னவர்தான்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், சுதா கொங்கரா திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றால் அடுத்ததாக விக்ரம் இயக்குனருடன் இணைய இருக்கிறார் சிம்பு.

விக்ரமின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் விக்ரமை வைத்து இருமுகன் என்ற திரைப்படத்தை இயக்கினார் இதனால் தற்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது, அதேபோல் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருக்கிறாராம்.

நடிகர் ஆர்யா பல திரைப் படங்களில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம். அதேபோல் நடிகர் ஆர்யா தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment