ஆபாசமாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் அளித்துள்ள சிம்பு,தனுஷ் படம் நடிகை.!

simbu-dhanush
simbu-dhanush

தற்பொழுது உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்கள் அதனை ரசித்து வந்தாலும் பல ரசிகர்கள் அவர்களை ஆபாசமாக திட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது சிம்பு மற்றும் தனுஷ் பட நடிகை தன்னை ஆபாசமாக இன்ஸ்டாகிராமில் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக போலீசாரிடம் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திவுள்ளார்.  பொதுவாக பெண்கள் என்றாலே பலர் அதனை காமப் பொருளாகவே நினைப்பதனால் தான் எவ்வளவு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிம்பு நடித்த ‘குத்து’ மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.

அந்த வகையில்  கர்நாடக மாநிலத்தில் இவர் எம்பியாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் வெளிவந்த ‘சார்லி 777’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

ramya
ramya

இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்த நிலையில் ஒருவர் மட்டும் ரம்யா குறித்த ஆபாச படத்தை வெளியிட்டுள்ளார். என் காரணமாக பெரிதும் அதிர்ச்சியடைந்த ரம்யா சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அடித்துள்ளார்.

இவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரசிகர்கள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.