சிம்பு நடிகைன்னா சும்மாவா.. கொரோனா நிதி கொடுத்த நிதி அகர்வால்? முழு விவரம் இதோ.

nithiagarwal

தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த நடிகையான நிதி அகர்வாலை  தற்பொழுது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் அது படங்களை தாண்டி இவர் செய்யும் செயல்களே கூறப்படுகின்றன.

தெலுங்கு சினிமாவில் மிக சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார் இதை தொடர்ந்து தற்போது தமிழில் பட வாய்ப்பு கிடைத்து உள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் ரசிகர்களையும் கவரும் ஒரு செயலை செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை அதிகமானதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்பிணர்வு வருவது போன்றவற்றை கையில் எடுத்து மக்களுக்கு அறிவுறுர்த்தி வருகின்றது.

இப்படி தீவிரமான கட்டுப்பாடுகளையும் மக்களுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்க தன்னால் முடிந்ததை செய்துவருகிறது இருப்பினும் இப்போதைய காலகட்டத்தில் நாம் எந்த ஒரு பொருளும் பற்றாக்குறையாக இருந்த விடக்கூடாது என்பதற்காக உங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கவேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார் அதற்காக தன்னால் முடிந்த காசோலைகளை அரசு ஊழியர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை தன்னால் முடிந்த காசை கொடுத்து வருகின்றனர்.

nithiagarwal
nithiagarwal

இது இப்படி நிலையில் தமிழ் சினிமாவில்  தற்போது வளரத் தொடங்கி உள்ள நிதி அகர்வால் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து நிதி அகர்வால் கொடுத்துள்ளது தற்போது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வைத்துள்ளது மேலும் சில நடிகைகள் நிவாரண நிதி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.