30 கோடி பட்ஜெட் படத்தில் சிம்பு.! துணிந்து இறங்கி அடிக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் சிம்பு என்றாலே வம்பு என்று கூறியது ஒரு காலம், ஏனென்றால் சிம்பு நடிக்க வந்து பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார், அதேபோல் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது, முதலில் சிம்பு ஹிட் படத்தை கொடுத்து வந்தாலும் சமீபகாலமாக இவர் நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை.

அதனால் ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி கிட்டத்தட்ட 30 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

ஆனால் மார்க்கெட் இல்லாத நடிகருக்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் 30 கோடி செலவு செய்யமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்தநிலையில் சிம்புவின் படத்திற்கு 30 கோடி செலவு செய்வது என்பது கொஞ்சம் பீதியை கிளப்பியுள்ளது என  கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக சிம்பு செல்லும் விழாக்களில் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும், அதனால் சுரேஷ் காமாட்சி 30 கோடி பட்ஜெட்டில் துணிந்து இறங்குகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியன்2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதால் அந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு மாநாடு படத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஏழரை லட்சம் இன்சூரன்ஸ் எடுத்து தயாரிப்பாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.

தயாரிப்பாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிரூபித்துள்ளார், இந்தநிலையில் ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற்றது அதனை தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னையில் உள்ள விஜிபியில் அரங்குகள் அமைத்து மாநாடு படபிடிப்பு மிக விரைவாக முடிக்கப்படும் என கூறியுள்ளார்கள், அதனால் விரைவில் சிம்பு ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் இருக்கிறது.

முப்பது கோடி போட்டு சிம்புவை வைத்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலைமையை பற்றி படம் வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment