ஆத்தாடி நம்ம சில்லுனு ஒரு காதல் ஸ்ரேயா சர்மாவா இது.!! என்ன இப்படி குட்டி நமிதாவா மாறிட்டாங்க! வைரலாகும் புகைப்படம்.

0

Shreya sharma look like namitha: சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் சில்லுனு ஒரு காதல், இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாதான் தயாரித்திருந்தார் படத்தை என் கிருஷ்ணா இயக்கியிருந்தார். படத்திற்கு இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, படத்தில் சூர்யா முதன் முதலில் பூமிகாவை காதலிப்பார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிறிந்து விடுவார்கள் பின்பு ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்து கொள்வார். அதன் பிறகு வாழ்க்கை எப்படி செல்கிறது பூமிகா என்ன ஆனார் என்பது தான் படத்தின் மீதிிக்கதை.

இந்த திரைப்படத்தில் சூரியா மற்றும் ஜோதிகாவிற்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா, இவரின் அசால்ட்டான நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் வியந்தார்கள் அந்த அளவு தன்னுடைய சுறுசுறுப்பான துருதுருவென நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார், தற்போது ஸ்ரேயா சர்மா மடமடவென வளர்ந்து நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ளார், அதன் பிறகு ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில் பள்ளி குழந்தையாக நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். என்னதான் இவர் படங்களில் நடித்து வந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இந்த நிலையில் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என ஸ்ரேயா சர்மா புதிய படங்களை சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசி வருகிறார், இவர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யாவிற்கு ஜோடி போடலாம் போல என கிண்டலடித்த வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவரின் புகைப்படத்தை பார்த்து நமிதா போல் சும்மா ஜிவ்வுன்னு இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

shriyasharma
shriyasharma