சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா.? வைரலாகும் புகைப்படம்

0

sillunu oru kadhal movie actress photo: கடந்த 2006 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் கே ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, ஸ்ரேயா சர்மா, சுகன்யா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, படத்திற்கு ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதிலும் முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் இன்றுவரை ரசிகர்களின் ரிங்டோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதுமட்டுமில்லாமல் காதல் ஜோடிகளின் ரிங்டோன் என்றால் அது முன்பே வா என் அன்பே வா பாடல் தான். அந்தளவு இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி படத்தை வெற்றியடையச் செய்வது.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சூர்யாவின் மனைவி ஜோதிகாகவும் பூமிகா லவ்வராக நடித்திருப்பார். நடிகர் வடிவேலு நகைச்சுவை கதாபாத்திரத்தில், முதலில் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா ஒப்புக்கொள்ளவில்லை ஆனால் ஜோதிகா அறிவுறுத்தலின்படி பின்பு சூர்யா இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது, இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் பூமிகாவின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் ஆக அமைந்தது.

ஆனால் இந்த திரைப்படத்தில் பூமிகா விறகு பதிலாக முதலில் நடிக்க இருந்தது பிரபல முன்னணி நடிகை அசின் தானாம். இந்த தகவல் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அசின் நடித்திருந்தாலும் பூமிகா அளவிற்கு அந்த கதாபாத்திரம் அழுத்தமாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

asin
asin