சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இவர் நடிச்சிருந்தா வேற லெவல் தான்

0

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் 2006 ஆம் ஆண்டு  கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படம் சூர்யாவின் ஆரம்பகட்ட சினிமா பயணத்திற்கு மிகமுக்கிய திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்று கூட கூறலாம்.

மேலும் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஜோதிகா, பூமிகா, ஸ்ரேயா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருப்பார். அதேபோல் சூர்யாவின் மகளாக ஸ்ரேயா சர்மா நடித்திருந்தார் தன்னுடைய துறுதுறு நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் ஸ்ரேயா ஷர்மா இவர் தற்போது சினிமாவில் நடிகையாக நடிப்பதற்கு  ஆர்வம் காட்டி வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகாவுடன் பூமிகாவும் நடித்திருப்பார். முதலில் பூமிகாவை காதலிப்பார் சூர்யா பின்பு இருவரும் சில காரணங்களால் பிரிந்து விடுவார்கள் பின்பு சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்துகொள்வார் ஆனால் பூமிகா திருமணம் செய்து கொள்ளாமல் வெளிநாட்டில் வாழ்ந்து வருவார் திடீரென ஒரு காலகட்டத்தில் சூர்யாவை பூமிகா சந்திப்பார் பிறகு நடந்ததுதான் சில்லுனு ஒரு காதல்.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அசின் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அசின் சில தனிப்பட்ட காரணங்களால் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். ஆனால் இதற்கு முன் அசின் சூரியாவுடன் இணைந்து கஜினி மற்றும் வேல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிட்  கொடுத்துள்ளார்கள்.

asin daughter
asin daughter