சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கதாநாயகியாக கலக்கபோகும் பிரபல நடிகை..! கதைக்கு ஏத்த பீசுதான்..!

silk smiththa life history movie acting actress: ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் சில்க் ஸ்மிதா பற்றி தெரியாதவர்களே கிடையாது. பொதுவாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று ஆரம்பத்தில் சொல்லப்போனால் அது சில்க் சுமிதா தான்.  இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியவர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் சினிமாவில் இருந்த காலத்தில் சில்க் ஸ்மிதாவுடன் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என பல முன்னணி நடிகர்களும் ஏங்கியுள்ளார்கள். பொதுவாக சில்க் ஸ்மிதா ஒரு திரைப்படத்தில் நடனம் ஆடி இருந்தாலே போதும் அந்த திரைப்படத்தில் மார்க்கெட்டே வேறு.

இவ்வாறு ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த சில்க் ஸ்மிதா இயற்கை எழுதியது ரசிகர்கள் மனதில் பெரும் கஷ்டத்தை உருவாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் அவர் இயற்கை எழுதியதற்கான காரணம் இதுவரை ஏன் என்று தெரியாமல் பல ரசிகர்களும் ஆராய்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நமது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்கள்.  இந்த திரைப்படம் சுமார் 100 கோடி அளவிற்கு வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எடுக்க இயக்குனர்கள் முன் வந்துள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் தமிழில் யார் நடிப்பது என்பது தான் கேள்வி குறியாக இருந்து வந்தன.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான நடிகைகள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான நடிகை உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் வேறு யாரும் இல்லை பிரபல தெலுங்கு நடிகையான அனுசுயா பரத்வாஜ் என்பவர் தான்.

anusuya
anusuya

Leave a Comment