இந்த ஒரே காரணத்தினால் சத்யராஜுடன் நடனமாட மறுத்த சில்க் ஸ்மிதா..! இம்புட்டு கோவகாரிய இவுங்க..!

0
sathyaraj
sathyaraj

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என பெயர் போனவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் படப்பிடிப்பு முடிந்த பிறகு பத்து நிமிடம் மட்டுமே காத்திருப்பாறம் அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் கிளம்பி விடுவாராம்.

பொதுவாக சினிமாவில் தன்னால் முடிந்த அளவிற்கு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை ஏங்க வைத்தாலும் இவர் உண்மையில் மிகவும் கோபக்காரி என்று பலரும் இவரை கூறுவார்கள். அந்த வகையில் திருத்தங்கள் என்ற திரைப்படத்தில் நடிகர் மோகன், நளினி என பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் சத்யராஜ். அந்த வகையில் இவர் சிலுக்குடன் நடனம் ஆடும் காட்சி  இடம்பெற்றிருந்த நிலையில் நடிகர் சத்யராஜும் இதற்கு சம்மதித்து கொண்டாராம்.

இதுவரை திரைப்படங்களில் அடியால், வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யராஜ் முதன்முதலாக சிலுக்கு உடன் நடனம் ஆடும் பொழுது ஆர்வக்கோளாறில் சிலுக்கு மீது கால் பட்டு விட்டது இதனால் கோபமடைந்த சில்க் ஸ்மிதா ஆட்டத்தை நிறுத்தி விட்டு படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே வந்து விட்டார்.

உடனே நடன இயக்குனர் என்னம்மா ஆச்சு ஏன் வந்துட்டீங்க என்று கேட்டவுடன் அந்த ஆளு என்னோட காலை மிதித்து விட்டான் ஆகையால் இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் என கூறி விட்டாராம் பிறகு இயக்குனர் உங்களைப்போல் அவருக்கு நடனம் ஆட தெரியாது இதுதான் முதல் முறை என்று கெஞ்சி கேட்டதன் பிறகு அவர் மீண்டும் வந்து நடனம் ஆடினாராம்.