35 வயதுக்குள் 360 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரே நடிகை.! உடலைக் கூட யாரும் வாங்காமல் அனாதையாக கிடந்த அவல நிலை..

silk smitha : நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் இவர் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் 10 பேர் நடனம் ஆடுவதில் ஒருவராக நடனமாடி வந்தார் அதாவது குரூப் டான்ஸராக நடனம் ஆடி வந்தார். தன்னுடைய வசீகரப் பார்வையால் இயக்குனர்களையும் நடிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தார்.  அதன் பிறகு படங்களில் கவர்ச்சி நடனம் ஆட ஆரம்பித்தார்.

பிறகு படிப்படியாக நடிகையாகவும் நடிக்க ஆரம்பித்தார் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி உள்ளிட்டோர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  பாலிவுட் பக்கம்  குத்தாட்டம் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வந்தார். ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா இல்லாத திரைப்படமே கிடையாது என்ற  அளவிற்கு புகழ் மேலோங்கி இருந்தது.

இப்படி பேரும் புகழையும் பெற்று வைத்திருந்த சில்க் ஸ்மிதா 35 வயதில் திடீரென மரணமடைந்தார் இவரின் மரணத்தில் இன்னும் மர்மம் இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள் சில்க் ஸ்மிதா இந்த மண்ணை விட்டு மறைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் புகழ் ரசிகர்களின் நெஞ்சை விட்டு மறைவதில்லை. 19 வயதில் நடிக்க ஆரம்பித்த சில்க்ஸ்மிதா தன்னுடைய 35 வயதுக்குள் 360 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

ஏனென்றால் மிகக் குறுகிய கால கட்டத்திலேயே 360 திரைப்படங்களில் நடித்துள்ளார் இனிமேல் வரும் நடிகைகள் இப்படி ஒரு சாதனையை தொடக்கூட முடியாது என பலரும் கூறி வருகிறார்கள் அந்த அளவு ஓயாமல் ஓடி ஆடி நடித்துள்ளார். சில்க் ஸ்மிதா மர்மமான முறையில் மறைந்த பிறகு ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரின் உடல் அனாதை பிணம் போல் கிடந்துள்ளது.

சில்க் ஸ்மிதாவின் உடலை யாருமே வாங்க முன் வரவில்லை பிறகு அவரது உறவினர்கள் தான் எடுத்துச் சென்றதாக தகவல் இருக்கின்றன. பேரும் புகழும் சாதனையும் படைத்த சில்க் மிதாவுக்கு 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர் கிடைத்தது போல் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அவரை போல் அச்சு அசலாக இருக்கும் விஷ்ணுபிரியாவை திரையில் சில்க் ஸ்மிதா போல் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள்.

silk smitha
silk smitha