சைலன்டாக முடிந்த ராஜா ராணி – 2 பிரபலம் சித்துவின் கல்யாணம் – இணைய தளத்தில் பரவும் திருமண புகைப்படம்.

பொதுவாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு இணையான சின்னத்திரை நடிகர் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான மற்றும் ஹிட் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி தொடரில் நடித்துவந்த செந்தில் ஸ்ரீஜா போன்றவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதனை அடுத்து பிரவீன் பெண்ணெட் இயக்கத்தில் மற்றொரு ஹிட் சீரியல் ஆன ராஜா ராணி தொடரில் நடித்து வந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் இந்த தொடரில் பயணிக்கும் போதே காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இதனையடுத்து தற்போது ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலின் நாயகி ஷபானா விஜய் டிவி பாக்யலக்ஷ்மி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி திருமணம் ஆகின. அதன்பின் ஷபானா வின் நெருங்கிய நண்பரான பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வந்த ரேஷ்மா.

அதே தொடரில் அவருடன் இணைந்து நடித்த மதன் என்பவரை சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகின. இதுபோல் தற்போது சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நடித்து வந்த சித்து மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் நேற்று திருமணமாகி உள்ளது. என்ன தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sithu and shreya
sithu and shreya
sithu and shreya
sithu and shreya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment