சித்தார்த் மீது உள்ளது காதலா இல்லையா.? நடிகை அதிதி ராவ் அதிரடி பேட்டி…

ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் நடிகை அதிதி ராவ் தமிழில் சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் அதிதி ராவ் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து காற்று வெளியிடை படத்திலும் அதிதி ராவ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சில தகவல்கள் வெளியானது.

அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் புகைப்படமும் இணையத்தில் வெளியானது. அந்த வகையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்றும் சில கிசுகிசுகள் இருந்தது.

இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் தற்போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது நடிகர் சித்தார்த் உடன் காதலா என்பது குறித்து கேள்வி எடுக்கப்பட்டது இதற்கு பதிலளித்த அதிதி ராவ்  தற்போது நான் படங்களில் நடித்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் தான் செலுத்தி வருகிறேன்.

மக்கள் எது ஆர்வமான விஷயங்களோ அதை தான் பெரிதாக பேசுவார்கள் அனால் அதையெல்லாம் கேட்ககூடாது. எனக்கு பிடித்த அனைத்து விஷயத்திலும் கவனமாக நடந்து வருகிறேன் என்று அதிதி ராவ் பேட்டியில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் டேட்டிங் செய்து வரும் நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்றும் பேசப்பட்டு இருந்தது.

இப்படி முழுமையாக கிளம்பிய வதந்திக்கு அனைத்திருக்கும் தற்போது அதிதி ராவ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது அதிதி ராவ் நடிப்பில் மூன்று வெப் சீரியஸ் மற்றும் ஒரு திரைப்படம் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment