ஸ்ருதிஹாசனா இது.? துளிகூட மேக்கப் போடாமல் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்

சினிமா உலகில் டாப் நடிகர்களின் வாரிசுகள் ஈசியாக அவர்களும் சினிமாவில் நுழைந்து விடுகின்றனர். ஆனால் முன்னணி நடிகர் நடிகை என்ற அந்தஸ்தை பெற அவர்கள் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டும் ஒரு சிலர் அதை சிறப்பாக செய்கின்றனர் ஒரு சிலர் தவற விடுகின்றனர். அந்த வகையில் கமலஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ் சினிமா உலகில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

ஆனால் இதற்கு முன்பாக கமலஹாசன் நடிப்பில் உருவான ஹேராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாம் அறிவு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து கொடுத்தது அதனை தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. சுருதிஹாசன் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து வெற்றிகளை குவித்தார்.

தமிழில் தொடர்ந்து நடித்து வந்த இவர் திடீரென பிற மொழிகளிலும் கவனம் செலுத்தினார். குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இவர் டாப் ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது ஒரு படத்திற்கு 2.50 கோடியில் இருந்து 3  கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் சுருதிஹாசன் தற்பொழுது சர்ச்சைகளில் மற்றும் கிசுகிசுக்களில் சிக்கி விடுகிறார்.

இருப்பினும் அது ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் ஒரு சில படங்கள் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது இப்படி இருக்கின்ற நிலையில் சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில்..

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசு ஏற ஏறத்தான் உங்க அழகு நல்லா தெரியுது எனக்கூறி கமெண்ட் அடித்தும், லைக்குகளை அள்ளி வீசியும் அசத்தி வருகின்றனர் இதோ நடிகை சுருதிஹாசனின் அந்த மேக்கப் இல்லாத புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sruthihasan
sruthihasan

Leave a Comment