வாட்ஸ்அப் நம்பரை கேட்ட ரசிகருக்கு தரமான பதிலடி கொடுத்த சுருதிஹாசன்.! ஷாக் ஆன ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நான் ஒரு பாடகியாக வரவேண்டும் என்று கனவோடு இருந்தவர் தான் சுருதிஹாசன் இவர் தந்தை கமல் ஹாசன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரும் பல திரைப்படங்களில் நடித்து வலம் வந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டார் சுருதிஹாசன் சிறு வயதில் இருந்தே நான் ஒரு பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நிலையில் அவரது அப்பா கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு பாடலை பாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் சுருதிஹாசன் இறுதியாக தமிழ் சினிமா உலகில் சிங்கம் 3 என்ற திரைப்படத்தில் பார்த்திருக்கலாம் அதற்கு பின்பு தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

மேலும் இவர் சமீபகாலமாக நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கேள்வி கேட்க அதற்கு இவரும் சமீபகாலமாகவே பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சுருதிஹாசன் புகைப்படத்தை பார்த்துவிட்டு மேடம் உங்கள் வாட்ஸ் அப் நம்பரை கொடுங்கள் என கேட்டிருக்கிறார் அந்த ரசிகர் கேட்டதற்கு சுருதிஹாசன் காவல்துறையின் முக்கிய அவசரத்திற்கு அணுகவேண்டிய எண்ணான 100 என்ற எண்ணை அந்த ரசிகருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

இந்நிலையில் அவர் பகிர்ந்த பதிவான தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.