அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா, இவர் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்திலும் நடித்து வந்தவர். நடிகை ஸ்ரேயா அவர்கள் கடைசியாக சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார், பின்பு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். எனவே  நடிகை ஸ்ரேயா தெலுங்கில் இரண்டு திரைப்படத்திலும். தமிழில் அரவிந்த்சாமி நடித்துவரும் நரகாசுரன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ஸ்ரேயா தற்போது சண்டகாரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ‘மை பாஸ்’ என்ற திரைப்படம் ஆகும், இத்திரைப்படத்தில் திலீப், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இதைதான் சண்டக்காரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

மேலும் சண்டக்காரி திரைப்படத்தில் திலீப் கதாபாத்திரத்தில் நடிகர் விமலும் மம்தா மோகன்தாஸ் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருவதால் படக்குழு லண்டனில் இருக்கிறார்கள். மேலும் ஸ்ரேயா இந்த திரைப்படத்தில் ஒரு சாப்ட்வேர் அதிகாரியாக நடித்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் விமலும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தத் திரைப்படத்திற்காக லண்டனில் உள்ள பிஸியான ஏரியாவான வாட்போர்ட் பகுதியில் மிகப்பெரிய நடன அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மேடையில் நடன நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது அந்த மேடையில் ஸ்ரேயா அழகிகளுடன் இணைந்த கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார், தற்பொழுது இவர் நடனமாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இதில் 200 துணை நடிகர்கள் 100 நடன கலைஞர்கள் மற்றும் விமல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு நடனம் ஆடி உள்ளார்.

shriya
shriya

Leave a Comment