திருமண நாளில் கணவருடன் இல்லாமல் ஸ்ரேயா செய்த அட்டூழியம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தற்போது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தாலும் நடிகை ஸ்ரேயா சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு நடிகை ஸ்ரேயா சரண் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா சரன் வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆகி வருகிறது. உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்கலான விஜய், தனுஷ், ரஜினி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்தது அதன் பின்னர் நடிகை ஸ்ரேயா சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

மேலும் நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தைகளும் உள்ளது.  இதனை தொடர்ந்து நடிகை ஸ்ரேயா சரண் மற்ற நடிகைகலை போல சமீப காலங்களாக பட வாய்ப்பிற்காக அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா சரண் தனது திருமண நாளில் கூட கணவருடன் செலவழிக்காமல் கிளாமர் போட்டோஷூட் செய்து உள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திருமண நாளும் அதுவுமா கணவருடன் இல்லாமல் இங்கு என்ன அட்டூழியம் பண்றீங்க என கிண்டல் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Exit mobile version