தனது கணவருடன் பிரபல கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஸ்ரேயா.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்.!

0

ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பல நடிகைகளும் தற்போது சினிமா பக்கமே வர முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் பலரும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்கள் அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை தான் ஸ்ரேயா.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம்,  விஜயுடன் அழகிய தமிழ் மகன்,ரஜினியுடன் சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் இவருக்கு இந்த திரைப்படங்களை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

பின்பு இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது கணவருடன் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார் திருமணம் செய்து கொண்ட பின்பு ஸ்ரேயா  தமிழ் சினிமாவில் நடிக்கவே வரவில்லை என்று கூட கூறலாம். அந்த வகையில் பார்த்தால் தனது ரசிகர்களுக்கு தலை காட்டும் வகையில்.

shreya
shreya

நாள்தோறும் புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் அதேபோல் தற்போது தனது கணவருடன் இவர் பிரபல கோவிலுக்கு சென்றுள்ளார் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

shreya
shreya

ஆம் இவர் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார் அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ரேயா தற்பொழுதும் அழகாக இருக்கிறார் இவர் மீண்டும் தமிழில் நடிக்க வந்தால் இவர்தான்  தற்பொழுது உள்ள கதாநாயகிகளில் சிறந்தவராக இருப்பார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.