தனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய பாடகி ஸ்ரேயா கோஷல்.! வைரலாகும் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பிரபல பாடகராக  வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல் இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். தன்னுடைய சிறுவயதிலிருந்தே இசை பயில துவங்கினார் பிரதிபலனாக பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடுவதற்காக அழைப்பு கிடைத்தது அப்பொழுது அங்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி 16 வயது சிறுமியின் குரலைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அது மட்டுமில்லாமல் படங்களில் பாடுவதற்கு வாய்ப்பையும் கொடுத்தார்.

சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே ஒரே திரைப்படத்தில் ஐந்து பாடலை பாடி அசத்தினார் பொதுவாக ஒரு ஹீரோ முன்னணி நடிகராக உருவெடுக்க வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமாக இருப்பது பாடல் வரிகள்தான் பாடல் நன்றாக இருந்துவிட்டால் அந்த ஹீரோ முன்னணி நடிகராக உருவெடுத்துவிடுவார் அதிலும் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து விட்டால் அந்த ஹீரோவை அசைக்க ஆளே இல்லை அந்த அளவு உயரத்துக்கு சென்றுவிடுவார்.

பாடகியாக பலரும் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் அந்த லிஸ்டில் தற்போது ஸ்ரேயா கோஷல் ஒருவர் இவர் சுமார் மூன்று லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் 18 வருடங்களாக பாடகியாக பாடி வரும் ஸ்ரேயா கோஷல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். இந்தநிலையில் 2015ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஷிலாதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் தமிழில் இளையராஜா, அனிருத், ஏ ஆர் ரகுமான், டி இமான் என பல முன்னணி இசை அமைப்பாளர் உடன் பணியாற்றியுள்ளார் அதுமட்டுமல்லாமல் பல பாடல்களை கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக பாடி வரும் ஸ்ரேயா கோஷால் திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.

shreya

இந்த நிலையில் கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதை குறிப்பிட்டு இருந்தார் இந்த நிலையில் தற்போது மே 22ஆம் தேதி கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் இந்த நிலையில் தற்போது ஸ்ரேயா கோஷால் முதல் பிறந்தநாள் அம்மாவாக எனக் கூறி தன்னுடைய மகனின் பிறந்த நாள் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவு செய்து ரசிகர்களிடம்  பகிர்ந்துள்ளார்.

வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version