என்னுடைய தவறு தான் ” கவினை” பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது – நடிகை அபர்ணாதாஸ்

kavin
kavin

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தனது ஒட்டுமொத்த திறமையும் வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஒரு சிலர் வெளியே வந்த பிறகு பட வாய்ப்பை அள்ளுகின்றனர் அந்த வகையில் கவின் ஏற்கனவே ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தாலும்..

பிக்பாஸ் – க்கு பிறகு அவருக்கு நல்ல எதிர்காலம் அமைந்தது. முதலில் லிஃப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்தார் அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட் ஆகிய நாளும் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

இந்த நிலையில் கவின் நடித்த “டாடா” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது இதில் கவினின் மாறுபட்ட நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா திரைப்படத்தில் கவின் உடன் கைகோர்த்து அபர்ணாதாஸ், பாக்யராஜ் ஐஸ்வர்யா, விடிவி கணேஷ், ஹரிஷ் குமார்..

மற்றும் பிரதீப் ஆண்டனி என பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர் படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால்.. டாடா திரைப்படம் நிச்சயம்  பெரிய வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் டாடா திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்த  அபர்ணாதாஸ் கவின் பற்றி ஒரு பேட்டியில் தவறாக பேசியிருக்கிறார்.

அதற்கு  மன்னிப்பு கேட்டு ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது நான் அளித்த பேட்டிகளில் கவின் ரொம்ப கோபக்காரர் என கூறி இருந்தேன் ஆனால் அவர் சரியான விஷயங்களுக்காக தான் அப்படி இருக்கிறார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவரை தெரியும் நீங்கள் இல்லை என்றால் இந்த படமே வந்திருக்காது என அபர்ணாதாஸ் கூறியுள்ளார்.