விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க வேண்டுமா.? அய்யய்யோ அவர் பயங்கரமான ஆளாச்சே.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் பல இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் வெற்றி பெற்று விட்டார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல கோடி வரை வசூல் செய்து விட்டது.உலகநாயகன் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி,பஹத் பாஸில் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பு தந்தார்கள்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்திருப்பார். ஆனால் இவர் நடித்த இந்த சந்தனம் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் தான் நடிக்க இருப்பதாக எப்பொழுதே தகவல் வெளியானது.

ஆனால் இதனை பற்றி சமீபத்தில் பேசியுள்ளாராம் ராகவா லாரன்ஸ் நான் தான் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஆனால் எனக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது தற்பொழுது நான் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கப் போகிறேன் என்றும் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இதனை அறிந்த ஒரு சில ரசிகர்கள் இவர்கள் கூட்டணி மிகவும் அற்புதமாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் கூடிய சீக்கிரம் இவர்கள் இணையும் திரைப்படத்தின் பெயரையும் அப்டேட்டையும் வெளியிட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment