அஜித்தின் வலிமை படத்தில் இருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படம்.! பாடல் பட பிடிப்பு தளத்தில் இருந்த செம்ம மாஸ்.

நடிகர் அஜித்தை பெரும்பாலும் வெளி உலகில் பார்க்க முடியாது என்பதால் ரசிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு முறையாவது திரை அரங்கிலாவது பார்த்துவிட வேண்டும் என எண்ணுவது வழக்கம்.

அத்தகைய ரசிகர்களுக்கு வருடத்திற்கு ஒரு படங்களையாவது கொடுத்து விடுவார் ஆனால் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து ஒரு வருடம் ஆகியும் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாததால் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது கூட படக்குழு சொல்லாமல் மறைத்து வைத்திருப்பது அஜித் ரசிகர்களை சற்று கோபமடையச் செய்தது.

இந்தப் படம் இதுவரை எவ்வளவு சூட்டிங் முடிந்து உள்ளது எப்பொழுது டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவருமா என்பது கூட படக்குழு சொல்லாமல் இருப்பதால் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சமூகவலைத்தள பக்கத்தில் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இந்தப் படத்தில் பணியாற்றும் ஒரு சிலர் மறைமுகமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர் இந்த நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் குத்து பாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது இதனை யுவன் சங்கர் ராஜா அறிவித்தார்.

மேலும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் அவர் பாடி உள்ளதாக கூறப்படுகிறது இந்த பாடலுக்காக ஒரிசாவில் இருந்து வாழ வைக்கப்பட்ட என்ற டிரம்ஸ் மாஸ்டர்களை அழைத்து  பணியாற்ற உள்ளனர் என கூறப்படுகிறது.

அந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதன்முதலாக வெளியாகி உள்ளன. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version