தமிழ் சினிமாவுலகில் டான்ஸராக என்ட்ரி ஆகி அதன் பின் ஹீரோவாக ஒரு சில சுமாரான படங்களை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் சுத்தமாக பட வாய்ப்பு இல்லாததால் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மாறி தற்போது வெற்றி மேல் வெற்றி கண்டு வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தற்போது அவரே படத்தின் கதையை இயக்கி அவரே நடித்து வருவதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அந்த வகையில் காஞ்சனா சீரிஸ் இவருக்கு நல்ல லாபத்தைப் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து பேய் படங்களை அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்
இப்பொழுது கூட கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் “ருத்ரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக புதுமுக நடிகையான ப்ரியா பவானி சங்கர் நடித்துவருகிறார்.
தற்போது படத்தின் ஷூட்டிங் அமாவாசை அன்று சுடுகாட்டில் நடு இரவில் எடுக்கப்பட்டது. ராகவா லாரன்ஸ் வந்து அசால்டாக நடித்து முடித்துவிட்டு போய்விட்டார் அதன்பிறகு ஹீரோயின் கதாபாத்திரம் அதே இடத்தில் நடைபெற இருந்தது ப்ரியா பவானி சங்கர்.

ஷூட்டிங் இடத்திற்கு காரில் இருந்து இறங்கி வந்த உடன் சுடுகாட்டை பார்த்துவிட்டு அஞ்சி நடுங்கி காரின் உள்ளே உட்கார்ந்து கொண்டார். மறுநாள் அவருக்காக சுடுகாடு போன்ற ஒரு செட் அமைக்கப்பட்டு பகலில் எடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துக் கொடுத்தார். தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.