ipl அணிக்கு வந்த அதிர்ச்சி செய்தி… ஆட்டத்தையே மாற்ற போகும் புதிய விதி.!

அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் வரப்போகும் டேக்டிக்கல் சப்ஷ்டியூட் எனும் புதிய விதி முறையில் 2023 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் நடக்க உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த விதிமுறையை வைத்து ஓர் அணி என்ன பண்ணலாம் என்று தெரியுமா? வாங்க பார்ப்போம்.

2023 கான ஐபிஎல் தொடரில் ஒரு புதிய விதி அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது டேக்டிக்கல் சப்ஷ்டியூட் என்று அழைக்கப்படும் இந்த விதிமுறையின் படி அணியில் உள்ள வீரர்கள் எவருக்காவது அடிபட்டால் சப்ஷ்டியூட் வீரர்கலை களத்தில் இறக்குவது வழக்கம்தான் ஆனால் அவர்களால் பேட்டிங் மற்றும் பௌலிங் போட முடியாது.

அனால் டேக்டிக்கல் சப்ஷ்டியூட் என்ற விதிமுறையின் படி சப்ஷ்டியூட் விளையாடும் வீரர்கள் பவுலிங், பில்டிங், பேட்டிங், என அனைத்தையும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரு அணியில் விளையாடும் 11வீரர்களின் பட்டியலை தான் முதலில் அறிவிப்பார்கள் இப்போது அந்தப் 11 வீரர்களுடன் சேர்த்து 4 சப்ஷ்டியூட் வீரர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கூறபடுகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரு இன்னிங்ஸில் 14வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகளில் உள்ள சப்ஷ்டியூட் வீரர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இவர்களுக்கு பதிலாக 11 வீரர்களில் இருந்து ஒருவர் வெளியேறப்படுவார். அது மட்டுமல்லாமல் இந்த விதிமுறையின் படி ஆட்டத்தின் மற்றும் பிச்சின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூடதலாக இருக்கும் ஒரு பவுலர் அல்லது ஒரு பேட்ச்மேனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் விடுவிக்கப்பட்ட வீரர் மீண்டும் போட்டியில் விளையாட முடியாது.

Leave a Comment